Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வார்டுகள் பிரித்ததில் வெளிப்படை தேவை : கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

வார்டுகள் பிரித்ததில் வெளிப்படை தேவை : கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

வார்டுகள் பிரித்ததில் வெளிப்படை தேவை : கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

வார்டுகள் பிரித்ததில் வெளிப்படை தேவை : கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 12, 2011 12:14 AM


Google News

மதுரை : 'மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பணியில், வார்டுகள் பிரித்ததில் வெளிப்படை தேவை,' என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.மாநகராட்சியின் 72 வார்டுகள், 100 வார்டாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மாநகராட்சி மற்றும் இணையும் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

மாநகராட்சி கவுன்சிலர்கள் கருத்துகள்:

காமேஸ்வரன்(தே.மு.தி.க.,): வைகை இரண்டாம் குடிநீர் திட்டத்தில் தினமும் குடிநீர் கிடைப்பதாக கூறினர். வாரத்தில் மூன்று நாள் கூட குடிநீர் கிடைப்பதில்லை. விரிவாக்க பகுதிக்கு எப்படி குடிநீர் தர

முடியும்?

சிலுவை(காங்.,): தற்போதைய 72 வார்டில் பின்பற்றப்படும் இட

ஒதுக்கீடு, விரிவாக்க வார்டில் தொடருமா? மேயர் தேர்தலில் பொது வேட்பாளர் இடம் பெறுவாரா?

செபாஸ்டின்(கமிஷனர்): இது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. அதுதொடர்பாக எந்த விபரமும் வரவில்லை. இருப்பினும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் 33 சதவீதம் தொடரும். எந்த வார்டுகள் என்பது, பின்னர் தெரியும்.

கணேசன்(மார்க்சிஸ்ட்): எந்த தெரு, எந்த வார்டில் இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை முழுமையாக தெரிவித்த பிறகே கருத்து கேட்க வேண்டும். இணைக்கும் பகுதிகளை மட்டும் காண்பித்து, கருத்து கேட்பதால், பிரயோஜனம் இல்லை. நிச்சயம் வெளிப்படை தேவை.

கமிஷனர்: கவுன்சிலர்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us