/உள்ளூர் செய்திகள்/கடலூர்/டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்ததுடி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்தது
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்தது
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்தது
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்தது
ADDED : ஜூலை 31, 2011 03:22 AM
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் 2 தேர்வை கலெக்டர் அமுதவல்லி பார்வையிட்டார்.தமிழக அரசு துறைகளான
கரூவூலம், ஊரக வளர்ச்சி, வணிகவரி, தொழிலாளர் நலத்துறை, பத்திரப்பதிவு
உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,695 பணியிடங்களை நிரப்பும்
பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழகம்
முழுவதும் 104 மையங்களில் தேர்வு நடந்தது.கடலூர் மாவட்டத்தில்
இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 20 ஆயிரத்து 38 பேருக்கு கடலூர்,
சிதம்பரம், நெய்வேலி மற்றும் விருத்தாசலம் ஆகிய நான்கு மையங்களில் 30
இடங்களில் தேர்வு நடந்தது.
காலை 10 மணி முதல் ஒரு மணிவரை தேர்வு
நடந்தது.கடலூர் தேர்வு மையங்களில் கலெக்டர் அமுதவல்லியும், நெய்வேலி
மற்றும் விருத்தாசலம் பகுதி தேர்வு மையங்களை டி.ஆர்.ஓ., ராஜேந்திரன்,
ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார், டி.எஸ்.பி., அறிவழகன், தாசில்தார் சரவணனும்
சிதம்பரம் தேர்வு மையங்களை ஆர்.டி.ஓ., இந்துமதியும் திடீர் ஆய்வு செய்தனர்.
அதேப்போன்று பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை
நடத்தினர்.அனைத்து தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.