/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பிள்ளையார் சிலை உடைப்புபனை வெல்லம் ஆலைக்கு தீபிள்ளையார் சிலை உடைப்புபனை வெல்லம் ஆலைக்கு தீ
பிள்ளையார் சிலை உடைப்புபனை வெல்லம் ஆலைக்கு தீ
பிள்ளையார் சிலை உடைப்புபனை வெல்லம் ஆலைக்கு தீ
பிள்ளையார் சிலை உடைப்புபனை வெல்லம் ஆலைக்கு தீ
ADDED : செப் 20, 2011 10:08 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே புத்தூரில் பனை வெல்லம் ஆலை, ஆட்டு கொட்டகை தீ பிடித்த நிலையில், நேற்று அதிகாலை பிள்ளையார் சிலையும் உடைக்கப்பட்டது. ராஜபாளையம் அருகே புத்தூர் மற்றும் சுற்று பகுதிகளில் மர்மமான முறையில் தீ பிடிக்கும் சம்பவம் தொடர்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில், அப்பகுதியை சேர்ந்த மாடசாமியின் ஆட்டு கொட்டகையில் தீ பிடித்தது. இதேபோல் புத்தூர் அருகே நல்லமங்கலத்தில் உள்ள ஒட்டை பிள்ளையார் கோயிலில், பிள்ளையார் சிலை மற்றும் நாகராஜர் சிலை உடைக்கப்பட்டிருந்தன. அதே பகுதி கணேசன் என்பவரது பனை வெல்லம் ஆலையிலும் தீப்பிடித்தது. இதனால், அங்குள்ளோர் இரவு காவலுக்காக அங்கேயே தங்கினர். இதனிடையே, நேற்று அதிகாலை புத்தூரை சேர்ந்த நல்லதம்பியின் வைக்கோல் படப்பு அருகே வந்த நபரை மக்கள் பிடித்தனர். நல்லதம்பி கூறுகையில், '' இரவு காவலில் இருந்தபோது, மேலவரகுணராம புரத்தை சேர்ந்த செந்தில்குமார் இரு முறைவந்தார். அவரை சந்தேகத்தில் பிடித்து , அக்கிராம உறவின் முறை நாட்டாண்மை மாரிமுத்துவிடம் ஒப்படைத்தோம்,'' என்றார்.
செந்தில்குமார் கூறுகையில், ''நான், அரசு உடற்கல்வி ஆசிரியர். அடையாள அட்டை உள்ளது. நான் தீ வைத்தேன் என்றால், போட்டோ எடுக்க வேண்டியது தானே,'' என்றார். மாரிமுத்து கூறுகையில், ''செந்தில்குமாரை போலீசில் ஒப்படைக்க தளவாய்புரம் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தோம். காலை 11 மணிவரை யாரும் வரவில்லை. இதனால் அங்கிருந்து செந்தில்குமார் சென்றுவிட்டார்,'' என்றார்.
இது தொடர்பான புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் , அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.