/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பரமக்குடியில் கூடுதல் கண்காணிப்பு : ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் தகவல்பரமக்குடியில் கூடுதல் கண்காணிப்பு : ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் தகவல்
பரமக்குடியில் கூடுதல் கண்காணிப்பு : ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் தகவல்
பரமக்குடியில் கூடுதல் கண்காணிப்பு : ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் தகவல்
பரமக்குடியில் கூடுதல் கண்காணிப்பு : ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் தகவல்
ADDED : செப் 13, 2011 10:15 PM
காரைக்குடி : '' பரமக்குடியில், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, '' என ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் தெரிவித்தார்.பரமக்குடி கலவரத்தில் காயமுற்ற ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்திப்மித்தல் காரைக்குடி மானகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை வந்த ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் காரைக்குடியில் சிகிச்சை பெற்று வரும் டி.ஐ.ஜி.,அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின், நிருபர்களிடம் ஏ.டி.ஜி.பி., கூறியதாவது: கலவரத்தின்போது தற்காப்பிற்காகவே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பரமக்குடி ஐந்து முனை, கமுதி, ராமநாதபுரம் உள்ளிட்ட பதட்டமான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு கம்பெனிக்கு 80 போலீஸ் வீதம் 22 போலீஸ் கம்பெனிகள் உட்பட 3000 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. ஐ.ஜி., 2 டி.ஐ.ஜி., 6 எஸ்.பி., 16 டி.எஸ்.பி., க்கள் முகாமிட்டுள்ளனர். என்றார்.தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., மாஹாலி, எஸ்.பி., க்கள் பன்னீர்செல்வம் (சிவகங்கை), அஸ்ராகர்க் (மதுரை) உடனிருந்தனர்.
( பாக்ஸ் மேட்டர்...) : 'கிரிக்கெட் ஹெல்மெட்டால்' தப்பியது தலைடி.ஐ.ஜி., சந்தீப்மித்தல் கூறுகையில், '' கலவரத்துக்கு முன் அனைவரையும் கலைந்து செல்லும்படி பல முறை எச்சரித்தேன். அத்துமீறிய அவர்கள் போலீசாரை நோக்கி கற்கள், பெட்ரோல் குண்டு வீசினர். தற்காப்புக்காக, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தலை பெரியதாக இருப்பதால், போலீஸ் 'ஹெல்மெட்' அணிவது எனக்கு அசவுகரியாக இருந்தது. இதனால் கடந்த 15 ஆண்டுகளாக 'ஹெல்மெட்' அணிவதில்லை. கடவுள் கிருபை இருந்ததால், பரமக்குடி சம்பவத்தின் முந்தைய நாளில் இரவு 10க்கு மேல் பூட்டியிருந்த கடையை திறக்க சொல்லி 'கிரிக்கெட் ஹெல்மெட்டை' வாங்கினேன். 'வெயிட்லஸாக' இருந்ததால் தலைக்கு பொருத்தமாக இருந்தது. கலவரத்தின் போது, 'ஹெல்மெட்' அணிந்திருந்ததால் என் தலை தப்பித்தது'' என்றார்.