/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கொத்தனாரிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைதுகொத்தனாரிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
கொத்தனாரிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
கொத்தனாரிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
கொத்தனாரிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
ADDED : செப் 13, 2011 12:52 AM
கும்பகோணம்: கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் கொத்தனாரிடம் நூதன முறையில் பணம்
பறித்தவரை போலீஸார் கைது செய்தனர். ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர்
சந்தனசாமி(45). இவர் சென்னையில் கொத்தனராக வேலை செய்து வருகின்றார். அவர்
கும்பகோணத்தில் பள்ளியில் படிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக நேற்று
முன்தினம் அதிகாலை சென்னையிலிருந்து கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு
வந்தார். அப்போது, தனது மகளுக்கு கொடுப்பதற்காக 4,000 ரூபாய் பணம் சரியாக
உள்ளதா? என்று கையில் வைத்து எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்தை
அடுத்த மேலானமேடு கிராமத்தை சேர்ந்த சிவராமன்(40) என்பவர் இந்த பணம் எனது
பையிலிருந்து எடுத்து வைத்துள்ளாயா? என்று கூறி பிடுங்கிவிட்டார். இதனால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை செய்ததில் பணத்தை பற்றி
முன்னுக்கு பின் முரணாக கூறவே பணத்தை திருப்பி சந்தனசாமியிடம் கொடுத்து
விட்டு சிவராமனை போலீஸார் அழைத்துச் சென்றனர். கும்பகோணம் மேற்கு போலீஸார்
விசாரணை செய்து வருகின்றனர்.