பள்ளிகளுக்கான ஓவியம்: சிறுவர்கள் அசத்தல்
பள்ளிகளுக்கான ஓவியம்: சிறுவர்கள் அசத்தல்
பள்ளிகளுக்கான ஓவியம்: சிறுவர்கள் அசத்தல்
ADDED : ஆக 01, 2011 10:28 AM
கோவை: பள்ளிகளுக்கு இடையே நடந்த ஓவியப் போட்டிகளில், பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
சிறுமுகை ஆலாங்கொம்பு ராகவேந்திரா வித்யாலயா பள்ளியில், மேட்டுப்பாளையம் தாலுகா அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டிகள் நடந்தன. கல்லாறு சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி ஓவிய ஆசிரியர் சின்னராஜ் நடுவராக இருந்தார். பசுமைச்சூழல் தலைப்பில் ராகவேந்திரா பள்ளி மாணவி கீர்த்தனா, செயின்ட் ஜோசப் பள்ளி அக்ஷயா ஸ்ருதி, சிறுமுகை அரசுப் பள்ளி மாணவன் ஜெயசூர்யா, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாசுபடுதல் தலைப்பில், லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அனீஸ்குமார், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக்., பள்ளி கவின், லிங்காபுரம் பள்ளி அருண் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
புவிவெப்பமயமாதல் தலைப்பில், நேஷனல் மெட்ரிக்., பள்ளி தினேஷ்பாபு, விஜயலட்சுமி மெட்ரிக்., பள்ளி ரூபன்ராஜ், ஹரிகிருஷ்ணன், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். எஸ்.ஆர். எஸ்.ஐ., பள்ளி நவீன்குமார், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி பவ்யமாருதி ஆறுதல் பரிசு பெற்றனர்.
பரிசளிப்பு விழாவில், தாளாளர் சுமதிவிஜயலட்சுமி தலைமை வகித்தார். உதயகுமார் பரிசு வழங்கினார். ஓவிய ஆசிரியர் சின்னராஜ் பேசினார்.