/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு வெளியாகுமாசத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு வெளியாகுமா
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு வெளியாகுமா
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு வெளியாகுமா
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு வெளியாகுமா
ADDED : ஆக 01, 2011 02:07 AM
திருநெல்வேலி : சத்துணவு திட்டத்தில் 28 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என நெல்லை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சத்துணவு திட்டத்தில் 28 ஆண்டுக்கு மேலாக ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். அடிப்படை ஊதியம் ரூ.5200ம், ஓய்வு பெறுகின்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படை ஓய்வூதியம் ரூ.3500ம் வழங்கவேண்டும். குடும்ப வாரிசுக்கும் கிடைக்கும் படி அறிவிப்பு வெளியிடவேண்டும்.10 குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க அரசு மானியம் காய்கறி வாங்கிட 3 ரூபாயும், விறகு வாங்கிட ரூ.2.40 மட்டுமே. தற்போதுள்ள விலைவாசி உயர்வால் உணவு செலவு தயாரிக்க கூடுதல் செலவாகிறது. எனவே 10 பேருக்கு உணவு தயாரிக்க மானிய செலவு ரூ.30 வழங்கவேண்டும். வாரத்தில் 5 நாட்களும் முட்டை, பாசிபயறு, கொண்டகடலை, உருளைக்கிழங்கு ஆகியவற்றை வேகவைக்க தனியாக எரிபொருள் மானியம் வழங்கவேண்டும்.தேச தலைவர்கள் பிறந்த நாட்களில் சர்க்கரை பொங்கல் வைக்க 100 குழந்தைகளுக்கு 8 கிலோ அரிசிக்கு வெல்லம் வாங்க ரூ.28 மட்டுமே அனுமதிக்கின்றனர். வெல்லம் வாங்க ரூ.200 வழங்கவேண்டும். எரிபொருள் மானியமும் வழங்கவேண்டும்.சத்துணவு பணியில் ஈடுபட்டுள்ள சமையலர்-உதவியாள் இருவருக்கும் உள்ள சம்பள வேறுபாடுகளை போக்கவேண்டும். தனியார் பள்ளி சத்துணவு மையங்களுக்கு தளவாட சாமான்கள், கட்டட பராமரிப்புக்கு அரசு உரிய நிதி ஒதுக்கவேண்டும்.ஆண்டுதோறும் நடைபெறும் சத்துணவு தணிக்கையில் அனுமதியில்லாத செலவு செய்ததாகவும், கூடுதல் செலவு செய்ததாகவும் தணிக்கை தடை குறித்து அமைப்பாளர்களுக்கு தெரிவிக்காமல் ஊதியத்தில் பிடித்தம் செய்வதை தவிர்க்கவேண்டும்.சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஊதியத்தை உயர்த்தவேண்டும். சத்துணவு திட்ட ஊழியர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மத்துவ உதவித் தொகை தடையில்லாமல் கிடைக்க அரசு உத்தரவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தியுள்னர்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.