ADDED : ஜூலை 15, 2011 03:20 AM
தூத்துக்குடி: குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு கணேசர்
மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.திட்டத்தின் சார்பில் குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை பள்ளி தலைமையாசிரியை
கஸ்தூரிபாய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் குழந்தையின் வருமானம்
வீட்டுக்கு அவமானம் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் மற்றும் குழ
ந்தை தொழிலாளர் முறை யை ஒழிப்போம் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பேரணிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ஜெசுதாசன் செய்திருந்தார்.