ADDED : ஆக 03, 2011 10:04 PM
நெல்லிக்குப்பம் : கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் நகர தி.மு.க.,வில் நகர செயலர் மணிவண்ணன், கவுன்சிலர் ராஜ்குமார் இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மணிவண்ணனின் ஆதரவாளரான மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிச்சாமிக்கும், ராஜ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் பழனிச்சாமியை தாக்கினர். பதிலுக்கு பழனிச்சாமி தரப்பினர், ராஜ்குமார் தரப்பினரை தாக்கினர். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமார், மணிகண்டன், பழனிச்சாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.