Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தமிழகம்,கேரளாவில் முட்டை விலை 257 காசாக நிர்ணயம்

தமிழகம்,கேரளாவில் முட்டை விலை 257 காசாக நிர்ணயம்

தமிழகம்,கேரளாவில் முட்டை விலை 257 காசாக நிர்ணயம்

தமிழகம்,கேரளாவில் முட்டை விலை 257 காசாக நிர்ணயம்

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News

நாமக்கல் : தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 257 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை உயர்வு பண்ணையாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 252 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 5 காசுகள் உயர்த்தி, 257 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், முட்டை விலை ஏற்றம் கண்டிருப்பது கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை



விலை விவரம்: சென்னை 257 காசு, பெங்களூரு 252 காசு, மைசூரு 248 காசு, ஹைதராபாத் 241 காசு, மும்பை 267 காசு, விஜயவாடா 241 காசு, கொல்கத்தா 295 காசு, பார்வாலா 259 காசு, டில்லி 270 காசு. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டைக் கோழி விலை, 34 ரூபாயாகவும், கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை 61 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us