/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பல்கலைக்கு "பறந்த' கம்பு ரகங்கள்: ஆராய்ச்சி திடலில் சாகுபடிபல்கலைக்கு "பறந்த' கம்பு ரகங்கள்: ஆராய்ச்சி திடலில் சாகுபடி
பல்கலைக்கு "பறந்த' கம்பு ரகங்கள்: ஆராய்ச்சி திடலில் சாகுபடி
பல்கலைக்கு "பறந்த' கம்பு ரகங்கள்: ஆராய்ச்சி திடலில் சாகுபடி
பல்கலைக்கு "பறந்த' கம்பு ரகங்கள்: ஆராய்ச்சி திடலில் சாகுபடி
ADDED : ஆக 11, 2011 11:37 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுசரணை ஆராய்ச்சி திடலில் சாகுபடி செய்யப்பட்ட கம்பு ரகங்களை, வேளாண் துறை அதிகாரிகள் சேகரித்து, வேளாண் பல்கலைக்கு அனுப்பினர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம், புதிய பயிர் ரகங்கள் வெளியிடுவதற்கு முன், பல்கலை வயல்வெளி பள்ளியில், அந்த ரகங்களை பயிரிட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக, ஒவ்வொரு வட்டாரத்திலும் அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்கப்பட்டு, புதிய பயிர் ரகம் ஆய்வு செய்யப்படுகிறது. பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில், வடக்கிபாளையம் பாலசுப்ரமணியம் என்பவரின் தோட்டத்தில், ஐந்து வகையான கம்பு ரகங்களுக்கு அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. பயிரிடப்பட்ட கம்பு ரகங்களை, வேளாண் துறையினர் மாதிரி எடுத்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினர். வடக்கு வட்டார வேளாண் அலுவலர் விஸ்வநாதன், உதவி வேளாண் அலுவலர் ஷேக் அமீர் கூறியதாவது:பொள்ளாச்சி வடக்கிபாளையத்தில், கம்பு ரகத்துக்கான அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்கப்பட்டது. மொத்தம் ஐந்து சென்ட் இடத்தில், தனித்தனியாக ஐந்து கம்பு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டது; தொழுஉரம் மட்டுமே வழங்கப்பட்டது. மானாவாரி நிலத்தை தேர்வு செய்து, நடவு முறையில் கம்பு சாகுபடி செய்யப்பட்டது. பி.எம்., 1001, 1002, 1003, 1004, 1005 என்ற ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு, 90 நாட்களில் அறுவடைக்கு தயாரானது. கம்பு ரகத்தின் மாதிரிகள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரகத்தின் உயரம், கதிரின் நீளம், அகலம், கதிரிலுள்ள கம்புகளின் எண்ணிக்கை, தன்மை, மகசூல் தன்மை, கம்பை தாக்கிய நோய்கள், பூச்சிகள் உட்பட பல காரணிகள் அட்டவணைப்படுத்தப்படும். பின், ஐந்து கம்பு ரகங்கள் குறித்த குறிப்பு, வேளாண் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் சேகரிக்கப்படும் குறிப்புகளை ஒப்பிட்டு, அதிக மகசூல் கொடுத்த கம்பு ரகத்தை கொண்டு, விவசாயிகள் செயல்விளக்க திடல் அமைக்க வேளாண் பல்கலை நடவடிக்கை எடுக்கும்.அனுசரணை ஆராய்ச்சி திடலில் சாகுபடி செய்யப்பட்ட கம்பு ரகத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ரகங்களும் வழங்கப்பட்டிருக்கும். புதிய ரகம் எது என்பது, வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தான் தெரியும். அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகத்தை, அதன் குறியீட்டுடன் செயல் விளக்க திடல் அமைக்க வழங்குவர்.இவ்வாறு, விஸ்வநாதன், ஷேக் அமீர் தெரிவித்தனர்.