/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் "ரகசிய' கட்டண உயர்வால் பாதிப்புஅரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் "ரகசிய' கட்டண உயர்வால் பாதிப்பு
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் "ரகசிய' கட்டண உயர்வால் பாதிப்பு
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் "ரகசிய' கட்டண உயர்வால் பாதிப்பு
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் "ரகசிய' கட்டண உயர்வால் பாதிப்பு
திருநெல்வேலி : தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் 'ரகசியமாக' பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் பஸ்களில் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டது. இந்த பஸ் கட்டணத்தில் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக பஸ் பயணிகள் புகார் தெரிவித்தனர்.இதில் குறிப்பாக, நெல்லையில் இருந்து எர்ணாகுளத்திற்கு 215 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.தமிழகத்தில் தற்போது முதற்கட்டமாக அல்ட்ரா சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து படிப்படியாக மற்ற பஸ்களிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தொடரும் திமுக 'பார்முலா':விரைவு போக்குவரத்து கழகத்தில் முதற்கட்டமாக அல்ட்ரா சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பாக அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. கடந்த திமுக ஆட்சி காலங்களில் கலர், பெயர்கள் மாற்றப்பட்டு பஸ் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டது.
இந்த பஸ்களில் முதலில் ஆடியோ, வீடியோ உட்பட பல்வேறு வசதிகளும் இருந்தன. ஆனால் நாளடைவில் இந்த வசதிகள் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்தாலும் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைக்கப்படவில்லை. இந்த பஸ் கட்டண உயர்வை கடைசி வரை அரசு ஒப்பு கொள்ளவில்லை.மற்ற பஸ்களிலும் உயரும்:இதே 'பார்முலா'வில் தற்போது விரைவு போக்குவரத்து கழக அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் 'கமுக்கமாக' இருந்து கட்டண உயர்வு விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கின்றனர். முதற்கட்டமாக அனைத்து விரைவு போக்குவரத்து கழக பஸ்களிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு பின்னர் மற்ற பஸ்களிலும் இதனை நடைமுறைப்படுத்தலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வசதி குறைவு கட்டணம் அதிகம்:இதற்கிடையில் ஏற்கனவே அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த பஸ்களுக்கு பதிலாக சாதாரண பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் அதிக கட்டணம் கொடுத்து வசதி இல்லாத பஸ்களில் பயணம் செய்வதாக பயணிகள் புலம்புகின்றனர். நேற்று முன்தினம் இரவில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இதே போல் பஸ்கள் இயக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.எனவே, அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்கவும், விரைவு போக்குவரத்து கழகத்தில் நிலவும் குளறுபடிகளை நீக்கவும் சம்பந்தப்பட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.அதிகாரிகள் மாற்றம்:>இதற்கிடையில் தூத்துக்குடி கிளை மேலாளராக பணியாற்றிய சிங்காரவேலு நெல்லைக்கும், நெல்லையில் பணியாற்றிய கென்னடி சென்னைக்கும், மதுரையில் பணியாற்றிய சீனிவாசன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருச்சி ஸ்குவாட் பிரிவில் பணியாற்றிய அபிமன்யூ மதுரை மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.