Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங்: 343 பேருக்கு உத்தரவு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங்: 343 பேருக்கு உத்தரவு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங்: 343 பேருக்கு உத்தரவு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங்: 343 பேருக்கு உத்தரவு

ADDED : செப் 20, 2011 10:57 PM


Google News
சிவகங்கை:சிவகங்கையில் நடந்த ஆசிரியர் கவுன்சிலிங்கில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 343 பேருக்கு பணியிட மாறுதல்,பதவி உயர்வு வழங்கப்பட்டன.

சிவகங்கை ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ஆசிரியர் இடமாறுதலுக்கான கவுன்சிலிங் நடந்தது. நான்கு நாட்களாக நடந்த கவுன்சிலிங்கில் ஒட்டுமொத்தமாக 271 ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம், 72 பேருக்கு பதவி உயர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.ஆய்வு: கவுன்சிலிங் முறையாக நடக்கிறதா என கண்காணிக்க, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் இணை இயக்குனர் உமா சிவகங்கையில் திடீர் ஆய்வு நடத்தினார். அவர், ஆசிரியர்களிடம் முறையாக கவுன்சிலிங் நடக்கிறதா, அதில் ஏதேனும் குறைபாடு உள்ளனவா என கேட்டு அறிந்துகொண்டார். அவருடன் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் செல்லம், மாவட்ட கல்வி அலுவலர்கள் சுபாஷினி, சண்முகம் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us