/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி ஜி.எச்., கம்ப்யூட்டர் மயம்பொள்ளாச்சி ஜி.எச்., கம்ப்யூட்டர் மயம்
பொள்ளாச்சி ஜி.எச்., கம்ப்யூட்டர் மயம்
பொள்ளாச்சி ஜி.எச்., கம்ப்யூட்டர் மயம்
பொள்ளாச்சி ஜி.எச்., கம்ப்யூட்டர் மயம்
ADDED : ஆக 21, 2011 11:58 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பணிகளை எளிமைப்படுத்த, சில
மாதங்களாக நடந்து வந்த கம்ப்யூட்டர் பொருத்தும் பணிகள் முடிந்தன.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை கம்ப்யூட்டர் மயமாக்கும் வகையில்,
பணிகள் நடந்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், தேனி, நாமக்கல் உட்பட
112 அரசு மருத்துவமனைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக,
சூலூர், தொண்டாமுத்தூர், மேட்டுபாளையம், வேட்டைகாரன்புதூர், அன்னூர்,
வால்பாறை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிகள்
நடந்து வந்தன. தற்போது, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பணிகள் முடிந்தன.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி அரசு
மருத்துவமனையில், டாக்டர்கள் அறை, மருந்தகம், ஆய்வகம், ஸ்கேன், ரத்த வங்கி,
செவிலியர்கள் அறை, ஊசி போடும் அறை என, அனைத்து பகுதிகளிலும், 39
கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டன. மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும்
வெளிநோயாளிகளின் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மாதம் ஒரு முறை
சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்த விபரங்கள், தற்போது மருத்துவமனையில்
இருந்தபடியே தினமும் அனுப்பலாம். கம்ப்யூட்டர் இயக்குவதற்கான தகவல்கள்
மற்றும் செய்முறை விளக்கங்கள் குறித்து, டாக்டர்களுக்கு பயிற்சியளித்த
பின், கம்ப்யூட்டர்கள் இயக்கப்படும்' என்றனர். கோவை ஐ.டி., தொழிற்நுட்ப
ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ''பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், கடந்த
இரு மாதங்களாக நடந்து வந்த கம்ப்யூட்டர்கள் பொருத்தும் பணிகள் முடிந்தன.
கோட்டூர், வேட்டைகாரன்புதூர் அரசு மருத்துவமனைகளிலும் கம்ப்யூட்டர்
பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்,
கம்ப்யூட்டர் செயல்பாடுகள் குறித்து டாக்டர்களுக்கு பயிற்சியளித்த பின்,
கம்ப்யூட்டர்கள் இயக்குவது துவங்கும்,'' என்றார்.


