/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலையோர பஸ் ஸ்டாப்பால் பயணிகள் பெரும் அவதிசாலையோர பஸ் ஸ்டாப்பால் பயணிகள் பெரும் அவதி
சாலையோர பஸ் ஸ்டாப்பால் பயணிகள் பெரும் அவதி
சாலையோர பஸ் ஸ்டாப்பால் பயணிகள் பெரும் அவதி
சாலையோர பஸ் ஸ்டாப்பால் பயணிகள் பெரும் அவதி
ADDED : ஆக 05, 2011 12:43 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த இண்டூரில் சாலையோரம் உள்ள பஸ் ஸ்டாப்பால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அதிக வருவாய் உள்ள பஞ்சாயத்துக்களில் இண்டூர் பஞ்சாயத்தும் ஒன்று. தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் உள்ள இண்டூரை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் இண்டூர் வழியாக ஒகேனக்கல் செல்ல வேண்டும். இதனால், இண்டூரில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் வாகன போக்குவரத்து அதிகம் உண்டு. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால், வாகனங்கள் இண்டூ;ர் வழியாக அணி வகுத்து செல்லும். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்து இண்டூரில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், தர்மபுரி - ஒகேனக்கல் சாலையில் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் பஸ்ஸுக்காக காத்திருந்து ஏறி செல்ல வேண்டியது உள்ளது. சாலையோரங்களில் நிற்கும் பஸ்கள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை அறியாமல் பயணிகள் ஒரு பக்கம் காத்திருப்பதும், பஸ் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேறு இடத்தில் நிற்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இண்டூர் பஞ்சாயத்து சார்பில் பஸ் ஸ்டாண்ட் கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பஸ் ஸ்டாப் அருகேயுள்ள நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுத்த போதும், பஸ் ஸ்டாண்ட் அமைக்க நிதி உள்ளிட்டவைகள் ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியிலும், இண்டூர் மக்களும் மிகவும் எதிர்பார்க்கின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்து இண்டூரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் ஸ்டாண்ட் அமைப்பதன் மூலம் பஞ்சாயத்துக்கும் கூடுதல் வருவாய்க்கு வழி ஏற்படும்.