/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் செப்.,1ல் இலவச யோகா பயிற்சிதூத்துக்குடியில் செப்.,1ல் இலவச யோகா பயிற்சி
தூத்துக்குடியில் செப்.,1ல் இலவச யோகா பயிற்சி
தூத்துக்குடியில் செப்.,1ல் இலவச யோகா பயிற்சி
தூத்துக்குடியில் செப்.,1ல் இலவச யோகா பயிற்சி
ADDED : ஆக 28, 2011 01:05 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் இலவசமாக யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி பிரிவு மூலமாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் 1.9.2011 காலை 5 மணி முதல் 6 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் யோகா பயிற்சிகள் யோகா கற்பிப்பாளர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம்.பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் பயிலும் பணிபுரியும் யோகா பயிற்சி மேற்கொள்ள ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள், பணியாளர்கள், பொதுமக்கள் வரும் 1ம் தேதி நடக்கும் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.


