காவிரியில் மூழ்கும் வீடுகள்; காலி செய்ய மறுக்கும் மக்கள்மின் நிலைய பணி நிறைவால் ஈரோடு வரை தேங்கும் ந

ஈரோடு: ஈரோடு அருகே காவிரி ஆற்றில், நீர் மின் நிலைய பணி நிறைவு பெற்றதால், ஈரோடு வரை காவிரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஈரோடு காவிரிக்கரையில் 300 வீடுகளும், எதிர்கரையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில், 800க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. பெரும்பாலும் சலவைத் தொழிலாளர்களே வசிக்கின்றனர். வீடுகளை காலி செய்யுமாறு இவர்களுக்கு, 2007லேயே நோட்டீஸ் வழங்கப்பட்டது. பச்சபாளி கிராமத்தில் மாற்று இடமும் வழங்கப்பட்டது.
இன்று வரை, காவிரிக்கரையிலேயே வசிக்கின்றனர். பள்ளிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் பெரும்பாலானவை கான்கிரீட் வீடுகள். அங்குள்ள மக்களும், வீடுகளை விட்டு வெளியேறாமல், வசித்து வருகின்றனர்.நீர்மின் நிலைய தடுப்பணையின் உறுதியை பரிசோதிக்கும் வகையில், டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர், அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், ஈரோடு, பள்ளிபாளையம் பகுதி காவிரிக்கரை வீடுகள், மெல்ல மெல்ல நீரில் மூழ்கி வருகின்றன.மின் உற்பத்தி பணி முழுமையாக துவங்கிய பின், அவசர கதியில் இங்குள்ள மக்களை வெளியேற்றாமல், உரிய பேச்சுவார்த்தை மூலம், இவர்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும்.