ADDED : செப் 30, 2011 12:45 PM
தர்மபுரி: தர்மபுரி அருகே பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி கூடுதல் அமர்வு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் சரகத்திற்குட்பட்ட மோட்டாங்குறிச்சியைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கும் இவரது உறவினரான பச்சையப்பன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, பழனி, அவரது மனைவி முனியம்மாள், மகன்கள் செல்வம்,சம்பத் ஆகியோர் பச்சையப்பன் மனைவி கவுரவம்மாளை கல்லால் அடித்து கொலை செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தர்மபுரி கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன், நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. ஆயிரமும் விதித்து உத்தரவிட்டார்.