/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அதிகாரிகள் அலட்சியத்தால் அறுவடை பாதிப்பு விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவுஅதிகாரிகள் அலட்சியத்தால் அறுவடை பாதிப்பு விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
அதிகாரிகள் அலட்சியத்தால் அறுவடை பாதிப்பு விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
அதிகாரிகள் அலட்சியத்தால் அறுவடை பாதிப்பு விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
அதிகாரிகள் அலட்சியத்தால் அறுவடை பாதிப்பு விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
கடலூர் : கடலூர் அருகே தேங்கியுள்ள மழை நீரை வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விளைந்த நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
இதனால் ஆற்றுப் படுகையில் உள்ள கிராமங்கள் சுள்ளியாங்குப்பம், மூர்த்திக்குப்பம், முள்ளோடு, உச்சிமேடு, சுபஉப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட கிராமங்கள் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமலும், சம்பா நெல் நடவு செய்ய நிலத்தை தயார் செய்ய முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர், டி.ஆர்.ஓ., தாசில்தார் ஆகியோர்களுக்கு மனு செய்தனர். டி.ஆர்.ஓ., மற்றும் தாசில்தார் முயற்சியால் ஒப்பந்தக்காரர் கண் துடைப்புக்காக சிறிய அளவில் தண்ணீரை திறந்து விட்டனர். வேளாண் அதிகாரிகள் அலட்சியத்தாலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்தக்காரருக்கு இணக்கமாக செல்வதாலும் தொடர்ந்து விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட சுபஉப்பலவாடி விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்பதென முடிவு செய்துள்ளனர்.