ADDED : ஜூலை 29, 2011 11:17 PM
தேனி : தேனி வைகை லயன்ஸ் சங்கம், ஸ்ரீ வி.பி.ஆர்., கல்வியியல் கல்லூரி, மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து வி.பி.ஆர்., கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடத்தினர்.
பிரவீன்குமார் அபினபு எஸ்.பி., தொடங்கி வைத்தார். தேனி வைகை லயன்ஸ் சங்க தலைவர் செல்வ கணேசன் தலைமை வகித்தார். தாளாளர் ஜெய்புஷ்பராஜ் வரவேற்றார். லயன்ஸ் சங்க செயலாளர்கள் சுப்பிரமணி, ஈஸ்வரதாஸ், பொருளாளர் ராமனாதன், வக்கீல் முத்துராமலிங்கம், ஜெயராமன், மகராசன் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள் ரத்தம் வழங்கினர். கல்லூரி தலைவர் காந்தி நன்றி கூறினார்.