ADDED : ஆக 01, 2011 02:55 AM
ஈரோடு: கரூர் மாவட்டம் வெள்ளிமலை, பெரியகுப்பம் மோகனரெட்டியின் மகன்
கோவிந்தராஜ். இவர் நேற்று முன்தினம் கரூர் - ஈரோடு மெயின் ரோட்டில்,
கொடுமுடி அருகே டூவீலரில் சென்றார்.அப்போது, ஈரோட்டில் இருந்து கரூர்
நோக்கி வந்த, ஆம்னி வேன் மோதியது. சம்பவ இடத்தில் கோவிந்தராஜ் பரிதாபமாக
இறந்தார்.
கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.