/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/லாரி மீது கார் மோதி ஒருவர் பலி: மூவர் காயம்லாரி மீது கார் மோதி ஒருவர் பலி: மூவர் காயம்
லாரி மீது கார் மோதி ஒருவர் பலி: மூவர் காயம்
லாரி மீது கார் மோதி ஒருவர் பலி: மூவர் காயம்
லாரி மீது கார் மோதி ஒருவர் பலி: மூவர் காயம்
ADDED : செப் 13, 2011 10:02 PM
குஜிலியம்பாறை : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்த தம்மப்பநாயுடு மகன் முருகன், 40.
விவசாயி. சகோதரர்கள் முனிராஜ், அவரது மனைவி செந்தாமரை, கிருஷ்ணன், இவரது மகன் வினோத்குமாருடன் சவர்லெட் காரில், நேற்று ராமேஸ்வரம் சென்றார்.வேடசந்தூர்- ரெங்கமலை கணவாய் மேட்டில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. முருகன், வினோத்குமார், முனிராஜ், செந்தாமரை காயம் அடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகன் இறந்தார். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூரில் இருந்து அரசு பஸ், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திண்டுக்கல் சென்றது. ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டி அருகே, ரோடு ஓரத்தில் நின்ற லாரியின் பின் பகுதியில் மோதியது.பஸ்சில் சென்ற திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த அமலோர்தம், 45, என்ற பெண் பலியானார். பூதமரத்துபட்டியை சேர்ந்த வல்லரசு, பெரம்பலூர் செல்வராஜ் காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.