/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/சமூகம் முன்னேற மாணவர்கள் உழைக்கணும்சமூகம் முன்னேற மாணவர்கள் உழைக்கணும்
சமூகம் முன்னேற மாணவர்கள் உழைக்கணும்
சமூகம் முன்னேற மாணவர்கள் உழைக்கணும்
சமூகம் முன்னேற மாணவர்கள் உழைக்கணும்
ADDED : ஆக 17, 2011 01:28 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பில் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி வளாக திடலில் சுதந்திர தினவிழா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் பேசியதாவது: நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் தியாகங்களை இவ்வேளையில் நினைத்து பார்க்க வேண்டும். அடிமைப்பட்டிருந்த இந்தியாவை அரும்பாடுபட்டு மீட்டவர்கள் நம் தேசத்தலைவர்கள் காந்தி, வ.உ.சி., கக்கன், கொடிக்காத்த குமரன் ஆகியோர். இதுபோன்ற எண்ணற்ற தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள். அனைவரும் நாட்டின் ஒற்றுமைக்காக, வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் சமூக முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை மாணவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வெற்றியாளராக விளங்க வேண்டும். புவி வெப்படைதலை தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட வேண்டும். கலாச்சார சீரழிவுகளில் மீள நிறைய நல்ல செய்திகளை தெரிந்து கொள்வதுடன், தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும். நீங்கள் வேலைக்கு சென்றவுடன் வருமான வரி செலுத்தி நாட்டில் உள்ள வறுமையை போக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 மற்றும் பல்கலை தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சிறப்பாக அணிவகுப்பு நடத்தி மாணவர்கள், சிறப்பான கலை நிகழ்ச்சி நடத்திய மாணவர்கள் ஆகியோருக்கு தாளாளர் சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி செய்திருந்தது.