ADDED : ஆக 03, 2011 01:19 AM
சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் பிரிவில், உலக தாய்ப்பால் வார விழா துவங்கியது.
விழாவுக்கு, குழந்தைகள் பிரிவு அமுதா ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஸ்டான்லி மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவபிரகாசம், விழாவை துவக்கி வைத்தார். தாய்ப்பாலின் அவசியம் குறித்து, செவிலியர், பெண்கள், நிபுணர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடனம், பாட்டு, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், பேராசிரியர்கள் சுஜாதா, கருணாகரன் மற்றும் ஹாரிஸ்ராஜா உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். உலக தாய்ப்பால் வாரவிழா நிறைவையொட்டி, வரும் 7ம் தேதி, கொழுகொழு குழந்தை போட்டி நடக்கிறது.