/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரயில்வே ஸ்டேஷனில் தவறு; அபராதம் வசூல்ரயில்வே ஸ்டேஷனில் தவறு; அபராதம் வசூல்
ரயில்வே ஸ்டேஷனில் தவறு; அபராதம் வசூல்
ரயில்வே ஸ்டேஷனில் தவறு; அபராதம் வசூல்
ரயில்வே ஸ்டேஷனில் தவறு; அபராதம் வசூல்
ADDED : ஆக 03, 2011 10:36 PM
திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பாதுகாப்பு, அவர்களது உடைமைகளை பாதுகாப்பதில் ரயில்வே நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இருப்பினும், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தவறு செய்வோர் அதிகரித்து கொண்டே வருகின்றனர்.ரயில்வே விதிகளின்படி, ஆளில்லா லெவல் கிராசிங்கில் ரயில் வருவதற்கு முன், தாண்டக் கூடாது; டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கக்கூடாது; படிக்கட்டுகளில் பயணிக்கக் கூடாது; பீடி, சிகரெட், மதுபானங்களை ரயிலில் உபயோகிக்கக்கூடாது. ஆனால், விதிகளை மீறி பலரும் பயன்படுத்துகின்றனர். ஜன., முதல் ஜூலை வரை டிக்கெட் வாங்காமல் பயணித்த 145 பேர், புகை பிடித்த 50 பேர், படியில் பயணம் செய்த 56 பேர், சதி வேலையில் ஈடுபட்ட இருவர், ஆளில்லா லெவல் கிராசிங்கை சேதப்படுத்திய நால்வர் என 257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற தவறுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரயில்வே நிர்வாகம், 60 ஆயிரத்து 125 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. இதுதவிர, அனுமதியின்றி ரயிலில் தின்பண்டங்கள் விற்பனை செய்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.