/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்உடுமலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
உடுமலை : உடுமலை உதவித்தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரத்தலைவர் சீனிவாச ராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன், துணைச் செயலாளர் ஜோதிபாசு, கணபதி, திருமலைசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில்,'முழுமையான சமச்சீர் கல்வி முறையை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத வேண்டும்; புதிய தன் பங்கேற்பு ஓய்வு ஊதியத் திட்டத்தினைக் கைவிட வேண்டும், முந்தைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர வேண்டும்; ஆறாவது ஊதிய மாற்றக் குறைபாடுகளை களைந்திடவும்; இடைநிலை, சாதாரணநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஒளிவு மறைவற்ற ஆசிரியர் கலந்தாய்வு முறையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும், மொத்த பணிக்கால அடிப்படையில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. துணைத்தலைவர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.