/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ரூட் மாறி செல்லும் குமரி பஸ்கள் : சாத்தை.,யில் கம்யூ., இன்று ஆர்ப்பாட்டம்ரூட் மாறி செல்லும் குமரி பஸ்கள் : சாத்தை.,யில் கம்யூ., இன்று ஆர்ப்பாட்டம்
ரூட் மாறி செல்லும் குமரி பஸ்கள் : சாத்தை.,யில் கம்யூ., இன்று ஆர்ப்பாட்டம்
ரூட் மாறி செல்லும் குமரி பஸ்கள் : சாத்தை.,யில் கம்யூ., இன்று ஆர்ப்பாட்டம்
ரூட் மாறி செல்லும் குமரி பஸ்கள் : சாத்தை.,யில் கம்யூ., இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 11, 2011 02:05 AM
சாத்தான்குளம் : கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் ரூட் மாறி செல்வதைக் கண்டித்து மா.கம்யூ., கட்சியினர் இன்று (11ம் தேதி) தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.
குமரி மாவட்டத்திலிருந்து வள்ளியூர், சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு 30 பஸ்கள் இயக்கப்படுகின்றது. மே மாதம் 12ம் தேதியிலிருந்து இந்த பஸ்கள் மன்னார்புரத்திலிருந்து திசையன்விளை வழியாக சுமார் 15 கி.மீ., தூரம் சுற்றி இட்டமொழி சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூர் செல்கிறது. இதனால் 40 நிமிடம் பயண நேரம் அதிகமாகிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நிர்வாகத்திற்கு மனுக்கள் பல கொடுத்தும் மவுனமே பதிலாக உள்ளதைக் கண்டித்து மா.கம்யூ., சாத்தான்குளம் ஒன்றியக் குழு சார்பில் இன்று மாலை சாத்தான்குளம் பழைய பஸ் ஸ்டாண்டில் தர்ணா போராட்டம் நடக்கிறது. ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மாவட்டச் செயலாளர் கனகராஜ், பன்னீர் செல்வம், பாலசுந்தர கணபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வேலுச்சாமி நன்றி கூறுகிறார்.