/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மின் மோட்டார்கள் பழுதால் மக்கள் குடிநீரின்றி தவிப்புமின் மோட்டார்கள் பழுதால் மக்கள் குடிநீரின்றி தவிப்பு
மின் மோட்டார்கள் பழுதால் மக்கள் குடிநீரின்றி தவிப்பு
மின் மோட்டார்கள் பழுதால் மக்கள் குடிநீரின்றி தவிப்பு
மின் மோட்டார்கள் பழுதால் மக்கள் குடிநீரின்றி தவிப்பு
ADDED : செப் 11, 2011 11:04 PM
குஜிலியம்பாறை : ஆர்.வெள்ளோடு ஊராட்சி பொன்னம்பட்டி காலனியில், 45 வீடுகள் உள்ளன.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட, மேல்நிலை தொட்டிக்கான மின் மோட்டார் பழுதடைந்து ஒரு மாதமாகிறது. இதுவரை சரி செய்யாததால் மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். ஆர்.வெள்ளோடு காலனியிலும் மின்மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குழாய் சரி செய்யாததால், காவிரி நீரும் வினியோகம் இல்லை. ஆர்.வெள்ளோடு ஊராட்சியில் உள்ள மூன்று குக்கிராம மக்கள் குடிநீருக்காக தோட்டங்களை தேடி அவதிப்படுகின்றனர். இந்நிலையை போக்க மின்மோட்டார்களை பழுது நீக்கி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, குடிநீர்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.