/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பம் தொலைபேசி நிலையம் பழுது: அதிகாரிகள் திணறல்கம்பம் தொலைபேசி நிலையம் பழுது: அதிகாரிகள் திணறல்
கம்பம் தொலைபேசி நிலையம் பழுது: அதிகாரிகள் திணறல்
கம்பம் தொலைபேசி நிலையம் பழுது: அதிகாரிகள் திணறல்
கம்பம் தொலைபேசி நிலையம் பழுது: அதிகாரிகள் திணறல்
ADDED : ஆக 16, 2011 11:45 PM
கம்பம் : கம்பம் தொலைபேசி நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டதால் பி.எஸ்.
என்.எல்., தரைவழி தொலைபேசி சேவைகள் முற்றிலும் முடங்கியது.கம்பம் பி.எஸ்.
என்.எல்., நிலையத்தில் ஆயிரக்கணக்கான தரைவழி இணைப்புகள் செயல்பாட்டில்
உள்ளது.நேற்று முன்தினம் அதிகாலை தொலைபேசி நிலையத்தில் திடீர் பழுது
ஏற்பட்டது. இதனால் தரைவழி தொலைபேசிகள், இன்டர்நெட் மையங்கள்
பாதிக்கப்பட்டன. பி.எஸ்.என்.எல்., உதவி பொறியாளர் இளங்கோ தலைமையில்
தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் பழுதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினர்.
2 நாட்களாகியும் பழுதை சரி செய்ய முடியவில்லை.தேனி, மதுரை நகரங்களில்
இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் நடக்கின்றன.
இளநிலை பொறியாளர் இளங்கோவிடம் கேட்டதற்கு, 'மொபைல் போன் சேவை மட்டுமே பழுது
ஏற்பட்டுள்ளது. சரி செய்யும் பணிகள் நடக்கிறது' என்றார்.