ADDED : செப் 13, 2011 10:02 PM
சின்னாளபட்டி : அம்பாத்துரையில் தனியார் கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறையை ஆக்கிரமித்துள்ள சிலர், அரசு கேபிள் நிறுவனம் என, எழுதி வைத்துள்ளனர்.
சின்னாளபட்டி, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு கேபிள் 'டிவி' ஒளிபரப்பிற்கான எம்.எஸ்.ஓ., வாக (மல்ட்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்), மதுரையை சேர்ந்த நிறுவனம் உள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறை அம்பாத்துரையில் செயல்பட்டது. இந்நிறுவனம் அரசு கேபிள் நிறுவனத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், அந்த அறையின் பூட்டை உடைத்து, சின்னாளபட்டி கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. மேலும், அரசு கேபிள் கார்ப்பரேஷன் என, முதல்வரின் படத்துடன் எழுதி வைத்துள்ளனர்.இதுகுறித்து இருதரப்பினரும் சந்திரசேகரன் எஸ்.பி., யிடம் புகார் செய்துள்ளனர்.