/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விளைநிலங்களில் புகுந்த யானைகள் : எலுமிச்சை, மா மரங்கள் சேதம்விளைநிலங்களில் புகுந்த யானைகள் : எலுமிச்சை, மா மரங்கள் சேதம்
விளைநிலங்களில் புகுந்த யானைகள் : எலுமிச்சை, மா மரங்கள் சேதம்
விளைநிலங்களில் புகுந்த யானைகள் : எலுமிச்சை, மா மரங்கள் சேதம்
விளைநிலங்களில் புகுந்த யானைகள் : எலுமிச்சை, மா மரங்கள் சேதம்
ADDED : செப் 13, 2011 10:07 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பு பகுதி தனியார் தோப்புகளில் புகுந்த யானைகள், எலுமிச்சை, மா மரங்களை சேதப்படுத்தின.மேற்கு தொடர்ச்சி மலை யொட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பு பகுதியில் தனியார் விளைநிலங்கள் அதிகம் உள்ளன.
மா, பலா, எலுமிச்சை, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு மான்கள், காட்டெருமை, யானை, காட்டு பன்றிகள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆறு மாதமாக மழை சரி வர பெய்ய வில்லை. வனப்பகுதியை யொட்டிய பேயனாறு தண்ணீரின்றி வறண்டுள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீருக்காக அடிக்கடி தனியார் நிலங்களில் புகுந்து, தண்ணீரை குடிப்பதோடு குழாய்களை உடைத்து , மரங்களை சேதப்படுத்துகின்றன. கடந்த ஒரு வாரமாக யானைகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் இரவு , எலுமிச்சை தோப்புகளில் புகுந்த யானைகள், அங்கிருந்த குடிநீர் குழாய் ,மா மர கிளைகளை உடைத்து , எலுமிச்சை மரங்களை வேறோடு சாய்த்து, இரும்பு வேலிகளை பெயர்த்துள்ளன. விவசாயி கந்தையா கூறியதாவது: யானைகள் எலுமிச்சை மரங்களை சேதபடுத்தாது என்றனர். இதை நம்பி 2 ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டேன். ஓரிரு மா, பலா மரங்களையும் நட்டு பராமரித்து வந்தேன். இரவில் யானைக்கூட்டம் தோப்புகளில் புகுந்து குடிநீர் குழாயை சேதப்படுத்தி, எலுமிச்சை மரம், மா மரம், பாலா மரத்தை சேதப்படுத்தியுள்ளது. பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.