/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முதியோர் உதவித்தொகை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவுமுதியோர் உதவித்தொகை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
முதியோர் உதவித்தொகை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
முதியோர் உதவித்தொகை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
முதியோர் உதவித்தொகை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 13, 2011 10:16 PM
சிவகங்கை : முதியோர் உதவித்தொகை கேட்டு வழங்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.முதியோர் உதவித்தொகை உட்பட அரசின் மாதாந்திர ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகள் எளிதில் பயனைடைய வேண்டும் என்ற நோக்கில் அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மாதந்திர ஓய்வூதியம் கேட்போர் உரிய படிவம், அல்லது வெள்ளைத்தாளில் எழுதி சம்பந்தப்பட்ட தாசில்தார் (சமூகபாதுகாப்பு திட்டம்)முகவரி எழுதி அந்தந்த வி.ஏ.ஓ., விடம் மனுவை வழங்கலாம்.ஒவ்வொரு திங்கள் கிழமையும் மனுக்கள் பெற்றுக்கொள்ளும் போது அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இதில் வேறு ஒரு கிராமத்தை கூடுதல் பொறுப்பாக பார்க்கும் வி.ஏ.ஓ.,வால் செவ்வாய் கிழமையில் மனுக்கள் வாங்கப்படும். இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமையன்று சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் ஒப்படைக்கப்படும். இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.