/உள்ளூர் செய்திகள்/சேலம்/எம்.ஜி.ஆர்., சிலை முன் தீக்குளிப்பேன் சீட் கிடைக்காத கவுன்சிலர் ஆவேசம்எம்.ஜி.ஆர்., சிலை முன் தீக்குளிப்பேன் சீட் கிடைக்காத கவுன்சிலர் ஆவேசம்
எம்.ஜி.ஆர்., சிலை முன் தீக்குளிப்பேன் சீட் கிடைக்காத கவுன்சிலர் ஆவேசம்
எம்.ஜி.ஆர்., சிலை முன் தீக்குளிப்பேன் சீட் கிடைக்காத கவுன்சிலர் ஆவேசம்
எம்.ஜி.ஆர்., சிலை முன் தீக்குளிப்பேன் சீட் கிடைக்காத கவுன்சிலர் ஆவேசம்
ADDED : செப் 21, 2011 01:07 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட,
கட்சி தலைமை சீட் வழங்காததால், ஆவேசம் அடைந்த, அ.தி.மு.க., வார்டு
கவுன்சிலர், 'எம்.ஜி.ஆர்., சிலை முன் தீக்குளிப்பேன்' என்று
எச்சரித்துள்ளார். பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சார்பில் தலைவர்
பதவிக்கு சீட் கேட்டு, 2வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி, 10வது வார்டு
கவுன்சிலர் முத்துசாமி, 14வார்டை சேர்ந்த அருள் ஆகியோர் விருப்ப மனு
கொடுத்தனர். நேற்று முன்தினம் பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு
அ.தி.மு.க., வேட்பாளராக பெரியசாமியை கட்சி தலைமை அறிவித்தது. 10வது வார்டு
அ.தி.மு.க., கவுன்சிலர் முத்துசாமி ஏமாற்றம் அடைந்தார். இதனால், ஆத்திரம்
அடைந்த முத்துசாமி நேற்று, காலை பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில் நின்று
கொண்டு, உள்ளுர் கட்சி நிர்வாகிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.
இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க., கவுன்சிலர் முத்துசாமி கூறியதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தலில்,
அ.தி.மு.க., கவுன்சிலராக வெற்றி பெற்ற பின், 5 லட்சம் ரூபாய், பேரூராட்சி
தலைவர் பதவி தருகிறோம் என, தி.மு.க.,வினர் பலமுறை அழைத்தனர். உயிரே
போனாலும், அ.தி.மு.க.,வை விட்டு வரமாட்டேன் என, கூறிவிட்டேன். தொடர்ந்து,
அ.தி.மு.க., வில் உண்மை தொண்டனாக உழைத்து வருகிறேன். அதனால், 2011
தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு சீட் தருவதாக கட்சி நிர்வாகிகள்
தெரிவித்தனர். ஆனால், வேறு நபருக்கு சீட் கொடுத்து விட்டனர். எனக்கு தலைவர்
பதவிக்கு சீட் தராவிட்டால், எம்.ஜி.ஆர்., சிலை முன், மண்ணெண்ணெய் ஊற்றி தீ
வைத்துக் கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.