ADDED : ஆக 21, 2011 02:37 AM
ப.வேலூர்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பரமத்தி கிளையில், இட்டு வைப்பு சேகரிப்பு மேளா நடந்தது.
வங்கிக் கிளை மேலாளர் நடராஜன் தலைமை வகித்தார். விழாவில், வங்கி டெபாசிட்தாரர்களுக்கு, 10. 5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வங்கியில் உள்ள இட்டு வைப்புக்கு காப்பீடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், பரமத்தி கிளை அதிக டெபாசிட் கொண்ட கிளையாக செயல்படுகிறது என, தெரிவிக்கப்பட்டது. வங்கி அலுவலர்கள் மற்றும் பரமத்தி சுற்றுவட்டார விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


