/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததுபி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
பி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
பி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
பி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
ADDED : செப் 18, 2011 09:39 PM
பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பொழிவு குறைந்துள்ளதால், பி.ஏ.பி., திட்ட அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்தது. இதில், பி.ஏ.பி., திட்ட முக்கிய அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. அணைகளிலிருந்து, உபரி நீர் 'ஸ்பில்வே' வழியாக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், ஒரு வாரமாக மழை பொழிவு இல்லாமல், வெயில் சுட்டெரித்து வருகிறது. அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால், நீர் மட்டம் உயர்வதும் தடைப்பட்டுள்ளது. சோலையாறு அணையில், 160.69 அடி உயரத்திற்கு நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,285 கன அடி தண்ணீர் வரத்துள்ளது. அணையிலிருந்து 1,502 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் அணையில், 71.95 அடி உயரத்திற்கு நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,022 கன அடி நீர் வரத்தும், 969 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. ஆழியாறு அணையில், 119.90 அடி உயரத்திற்கு நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 867 கன அடி நீர் வரத்துள்ளது. 785 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையில், 41.61 அடி உயரத்திற்கு நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 617 கன அடி நீர் வரத்தாகவும், 1,235 கன அடி நீர் வெளிய÷ற்றமாகவும் உள்ளது. அமராவதி அணையில், 48.45 அடி நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 298 கன அடி நீர் வரத்தாகவும், 905 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது.