Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூரில் "யார்னெக்ஸ்' நூலிழை கண்காட்சி துவங்கியது : சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவாக்க வாய்ப்ப

திருப்பூரில் "யார்னெக்ஸ்' நூலிழை கண்காட்சி துவங்கியது : சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவாக்க வாய்ப்ப

திருப்பூரில் "யார்னெக்ஸ்' நூலிழை கண்காட்சி துவங்கியது : சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவாக்க வாய்ப்ப

திருப்பூரில் "யார்னெக்ஸ்' நூலிழை கண்காட்சி துவங்கியது : சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவாக்க வாய்ப்ப

ADDED : செப் 10, 2011 02:05 AM


Google News
திருப்பூர் : 'யார்னெக்ஸ்' நூலிழை கண்காட்சி, திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது; நாளை வரை நடக்கிறது. கண்காட்சியில் செயற்கை நூலிழைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்களை தயாரித்து, வர்த்தகத்தை பெருக்க முடியும்; சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பின்னலாடை ஜவுளி உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், எஸ்.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் மீடியா நிறுவனம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் 'யார்னெக்ஸ்' கண்காட்சி நடத்தப்படுகிறது. மூன்றாம் ஆண்டு 'யார்னெக்ஸ்' கண்காட்சி, திருமுருகன் பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது. 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி துவக்கி வைத்தார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நூல் மற்றும் பைபர் கிளாத் தயாரிப்பு நிறுவனங்கள் 40க்கும் அதிகமான ஸ்டால்களை அமைத்துள்ளன. பருத்தி நூலிழைகள், 'விஸ்கோஸ்', 'லினன்', 'பாலிகாட்டன்' உள்ளிட்ட நவீன செயற்கை நூல் இழைகளும், 'பைபர்' கிளாத் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சாயமிடப்பட்ட நூலிழைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள் ளது வரவேற்பை பெற்றுள்ளது. வரி வரியான துணிகளை 'நிட்டிங்' செய்ய உதவும் 'ஸ்டர்கி' பாலிகாட்டன் நூலிழைகள், மெல்லிய இருளில் ஒளிரும் 'ஸ்பர்க்லர்ஸ்' நூலிழைகள், கதர் துணி போன்ற பனியன் துணியை உருவாக்கும் 'டாட்டட்' நூலிழைகள் இடம் பெற்றுள்ளன. சாயமிடுதலின் தேவையை தவிர்க்கும் வகையில், 'ஸ்பெஷல் எபக்ட்' நூலிழைகள் மூலமாக, தேவையான கலர்களில், தேவையான 'டிசைன்'களில் துணிகளை உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.'நிட்மா' தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:திருப்பூர் தொழில் துறையினர், உலக நாடுகளுடன் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளுடன் கூடிய, மேம்படுத்தப்பட்ட நூலிழைகள் நிறைந்த இக்கண்காட்சி பெரும் உதவியாக இருக்கும். சர்வதேச அளவில், 80 சதவீதம் அளவுக்கு செயற்கை நூலிழைகளும், 20 சதவீதம் அளவுக்கு பருத்தி நூலிழைகளும் பயன்படுத்தப்படுகின்றன. நேர்எதிர்மாறாக, இந்தியாவில், 90 சதவீதம் அளவுக்கு பருத்தி இழைகளும், ஐந்து சதவீதம் மட்டுமே செயற்கை நூலிழைகளும் பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச அளவில், நவீன ஆடை தயாரிப்புக்கு, பருத்தி நூலின் தரத்துடன் செயற்கை நூலிழைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.பருத்தி நூலிழைகளை கொண்டு பின்னலாடைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. செயற்கை நூலிழை கள் கிடைக்கும்போது, நீச்சல் ஆடைகள், விளையாட்டு ஆடைகள், மருத்துவ ஆடைகள் என பல்வேறு பிரிவு களிலும், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து, வர்த்தகத்தை மூன்று மடங்கு பெருக்க முடியும், என்றார்.'டிப்' சங்க தலைவர் மணி கூறுகையில்,''சாயத்தொழில் பிரச்னையால் பனியன் துணிகளுக்கு சாயமிட முடியாமல், உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர். இக்கண்காட்சியில் சாயமிடப்பட்ட அதிநவீன நூலிழைகள் இடம் பெற்றுள்ளது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். இத்தகைய நூலிழைகளை கொண்டு, 'நிட்டிங்' செய்து, 'வாஷிங்' மட்டும் செய்து, வழக்கம்போல் 'பிராசசிங்' செய்து, உற்பத்தியை தொடர முடியும். செயற்கை நூலிழைகள் கண்காட்சி சரியான நேரத்தில் நடத்தப்படுவதால், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை தயா ரித்து, உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்த அளவு பயனடைவர்,'' என்றார். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏ.இ.பி.சி.,) முதன்மை இயக்குனர் ரெட்டி கூறியதாவது: பருத்தி நூலிழைகளை கொண்டு, குளிர்காலம் மற்றும் கோடை கால ஆர்டர்களை மட்டுமே தயாரிக்கிறோம். தற்போது, குளிர்பிரதேசங்களில், மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நூலிழை தயாரிப்பு ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்தியாவில், செயற்கை நூலிழைகளில், ஆடைகள் உற்பத்தியை தொடரும் போது, சர்வதேச நாடுகளில் வர்த்தகத்தை மேலும் விரிவாக்க முடியும்.உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், அதிநவீன மெஷின்களை இறக்குமதி செய்து, கே.டி.எம்., மையம், ஆடை உற்பத்திக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. புதிய ஆராய்ச்சிகளையும் நடத்த உதவு கிறது. மொத்த உற்பத்தியில், ஐந்து சதவீதம் அளவுக்கு மட்டுமே, 'சிந்தடிக்' நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும்போது, வர்த்தகம் மென்மேலும் வளரும்.செயற்கை நூலிழைகளும், பருத்தி நூலுடன் கலந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், பருத்தி நூலின் அளவு குறைவதால், எதிர்காலத்தில் பருத்தி நூலுக்கான தட்டுப்பாடு நீங்கும். செயற்கை நூலிழைகளை பயன்படுத்துவதால், உற்பத்தி மதிப்பு உயரும், என்றார்.எஸ்.எஸ்., நிறுவன அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,''செயற்கை நூலிழைகள் பயன்பாடு அதிகரிப்பதன் மூலமாக, பருத்தி நூலுக்கான தட்டுப்பாடு நீங்கும். அதிநவீன நூலிழைகள் மூலமாக, 100 சதவீத உற்பத்தியை பெருக்க முடியும். கடந்த ஆண்டுகளை காட்டிலும், நூலிழைகள் மற்றும் 'பைபர்' கிளாத் உள்ளிட்ட பொருட்களை கொண்ட 'யார்னெக்ஸ்' கண்காட்சிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது,'' என்றார். காலை 10.00 முதல் இரவு 7.00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி, நாளை நிறைவு பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us