Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு கொலை மிரட்டல் மாஜி தி.மு.க., கவுன்சிலர் மீது விவசாயி புகார்

நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு கொலை மிரட்டல் மாஜி தி.மு.க., கவுன்சிலர் மீது விவசாயி புகார்

நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு கொலை மிரட்டல் மாஜி தி.மு.க., கவுன்சிலர் மீது விவசாயி புகார்

நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு கொலை மிரட்டல் மாஜி தி.மு.க., கவுன்சிலர் மீது விவசாயி புகார்

ADDED : ஆக 01, 2011 04:09 AM


Google News
ஆத்தூர்: ஆத்தூர் அருகே விற்பனை செய்த விவசாய நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு, அடியாட்களை வைத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயி ஒருவர், போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம், அக்கிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி நல்லதம்பி மகன் செந்தில்குமார் (42). அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி, நரசிங்கபுரம் நகராட்சி, விநாயகபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜோதி, அவரது கணவர் பெருமாள் ஆகிய இருவரிடம், 11 ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.அந்நிலத்தின் மார்க்கெட் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜோதி, செந்தில் குமாரிடம் கூடுதல் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.அதனால் மனமுடைந்த செந்தில், கடந்த ஜூன் 16ம் தேதி, மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதன்பேரில், கடந்த 23ம் தேதி நிலமோசடி துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீஸார் விசாரணை செய்து, ஜோதியை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.இந்நிலையில், கடந்த, 29ம் தேதி ஜோதியினுடைய மகன்கள் ரவி, அரவிந்த், மந்தைவெளி பகுதியை சேர்ந்த அய்யங்குட்டி சேகர் மற்றும் ஐந்து பேர் கொண்ட கும்பல், செந்தில்குமாரிடம் தகராறு செய்துள்ளனர்.அதனால், செந்தில்குமார் வீட்டை பூட்டிவிட்டு ராசிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின், நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பெருமாள், அவரது மகன்கள் ரவி, அரவிந்த், அய்யங்குட்டி சேகர், கூலித்தொழிலாளி பெருமாள் உள்ளிட்ட கும்பல் ஆயுதங்களுடன் வீட்டினுள் இருந்துள்ளனர்.அப்போது, அக்கும்பல் செந்தில்குமாரை தாக்கியதோடு, கழுத்தில் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கும்பலிடமிருந்து தப்பிய செந்தில்குமார், உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, ஆத்தூர் போலீஸில் புகார் செய்தார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன், சம்பவம் குறித்து தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜோதி, அவரது மகன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். ஜோதி மீது, ஆத்தூர் போலீஸ் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us