/உள்ளூர் செய்திகள்/மதுரை/"என் மதுரை' கலைவிழா செப்.8 ல் துவக்கம்"என் மதுரை' கலைவிழா செப்.8 ல் துவக்கம்
"என் மதுரை' கலைவிழா செப்.8 ல் துவக்கம்
"என் மதுரை' கலைவிழா செப்.8 ல் துவக்கம்
"என் மதுரை' கலைவிழா செப்.8 ல் துவக்கம்
ADDED : செப் 06, 2011 01:40 AM
மதுரை : மதுரை ரோட்டரி கிளப்களின் 'என் மதுரை' அமைப்பு சார்பில், செப்., 8 முதல் 14 வரை, கலை, கலாசார 'சூர்யத் திருவிழா' மதுரை மடீட்சியா ஹாலில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.செப்., 8ல் சென்னை சஞ்சய் சுப்ரமணியன் வழங்கும் கர்நாடக இசைப்பாட்டு, 9ல் கட்டாக் கஞ்சன் நடன அகாடமி வழங்கும் 'ஒடிசி' குழு நடனம், 10ல் டில்லி சவிதா சாஸ்திரியின் பரதம், 11ல் திருவனந்தபுரம் மிதிலாலயா வழங்கும் ராமாயண பாலே நிகழ்ச்சி நடக்கிறது.
செப்., 12ல் பெங்களூரு வீணா, தான்யா சகோதரிகளின் மோகினியாட்டம், 13ல் டில்லி ராமவைத்தியநாதனின் பரதம் நடக்கிறது. செப்., 14 மாலை 6.30 மணிக்கு, மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டலில் ரமேஷ் நாராயண் குழுவினரின் இந்துஸ்தானி பாடலிசை நடக்கிறது.


