ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
அவிநாசி : இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து ஐ.நா., சபை மூவர் குழு விசாரணை நடத்தியது.
இதுதொடர்பாக ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, 'சிடி' தயாரித்து வெளியிட்டார். அதை, அவிநாசி நகர ம.தி.மு.க., சார்பில், பழங்கரையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது, நகர செயலாளர் ரவி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் சென்னியப்பன், முருகன், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர பொருளாளர் பாலு நன்றி கூறினார்.