ADDED : ஆக 23, 2011 11:27 PM
திருப்பூர் : திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் மாணவ - மாணவியர் கலைத்திறன் வெளிப்படுத்தும் போட்டி நடந்தது.
தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கந்தசாமி முன்னிலை வகித்தார். மாநகராட்சி அரண்மனைப்புதூர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஓவியம் வரைந்து, தேச பக்தி பாடல்கள் பாடினர்.கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 20 பேர், பல்வேறு வகையான ஆசனம் செய்து அசத்தினர். அனுப்பர்பாளையம் இசை ஆசிரியர் சிவச்சந்திரனின் மாணவர்கள் கீபோர்டு வாசித்தும், மிருதங்க வித்வான் சுரேந்தரின் மாணவர்கள் மிருதங்க இசை நிகழ்த்தினர்.கோவை இடையர்பாளையம் ஆர்.பி.எம்., வித்யாலயா பள்ளி நான்காம் வகுப்பு மாணவி அட்சயா, தீபந்து நடனம் ஆடி மெய்சிலிர்க்க வைத்தார். சாதனை புரிந்த மாணவர்களுக்கு செயலாளர் நீறணி பவளக்குன்றன் பரிசு வழங்கினார்.