ADDED : ஆக 07, 2011 01:43 AM
ராமநாதபுரம் : சீனாவில் இருந்து வந்து கொண்டிருந்த பூண்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கொடைக்கானலில் மலைப் பூண்டு, அதிகளவில் விளைகிறது. பழநி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், கோவை போன்ற இடங்களில் தரைப்பூண்டு விளைகிறது. தரைப்பூண்டை விட, மலைப்பூண்டு காரம் அதிகமாக இருப்பதால், இதன் விலை அதிகம். தரைப்பூண்டு அளவுக்கு ஏற்றவாறு விலை இருக்கும். கடந்தாண்டு கடைசியில், விளைச்சல் குறைவாக இருந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டு வரத்து குறைந்ததாலும், கிலோ 600 ரூபாய் வரை விற்றது. இதனால், சீனாவில் இருந்து பெரிய பூண்டுகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதில், போதிய காரம் இல்லை. தற்போது பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. மலைப்பூண்டு கிலோ 140 வரை விற்கப்படுகிறது. மேலும் மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசங்களிலிருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், சீனா பூண்டு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.