மாஜி ராணுவ அதிகாரியை 2 நாட்கள்போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
மாஜி ராணுவ அதிகாரியை 2 நாட்கள்போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
மாஜி ராணுவ அதிகாரியை 2 நாட்கள்போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
ADDED : ஜூலை 20, 2011 05:43 AM
சென்னை:சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் ராமராஜிடம், புலன் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை கோர்ட் அனுமதியளித்துள்ளது.
சென்னை தீவுத்திடல், இந்திரா நகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த, குமார் என்பவரின் மகன் தில்ஷன். இவன், கடந்த 3ம் தேதி ராணுவ குடியிருப்பு பகுதியில், பாதாம் கொட்டை பறிக்கச் சென்ற போது, ராணுவ அதிகாரி ஒருவர் சுட்டதில், பலியானான். சி.பி.சி.ஐ.டி., போலீசார் 12 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். அதில், அந்த குடியிருப்பில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் ராமராஜ், தில்ஷனை சுட்டதை ஒப்புக் கொண்டார். நேப்பியர் பாலத்தின் கீழ் கிடந்த அவரது துப்பாக்கியையும், போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ராமராஜ், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில், புலன் விசாரணை செய்ய வேண்டியிருப்பதால், ராமராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற மனுவை, சைதாப்பேட்டை 11 வது கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். அவ்வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர் கோபிநாத் ஆஜரானார். ராமராஜை 2 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, மாஜிஸ்திரேட் ராம் உத்தரவிட்டார்.