Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்

அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்

அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்

அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்

ADDED : அக் 13, 2011 09:57 PM


Google News



உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் அணைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆர்.என்.சதாசிவம் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்தார். அணைப்பட்டியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி அனைத்து சமுதாயத்தினரின் நன்மதிப்பையும் பெற்றவர். அவர் கூறியதாவது; அணைப்பட்டிக்கு சப்ளையாகும் குடிநீர் சண்முகாநதி, சுருளிப்பட்டி பெரியாற்றிலிருந்து எடுத்து கலந்து கொடுக்கப்பட்டுவருகிறது. இதனால் குடிநீரின் தன்மை மாறி ஏற்புடையதாக இல்லாமல் உள்ளது. நீண்டகாலமாக உள்ள இப்பிரச்னையை தீர்க்க லோயர்கேம்ப்பிலிருந்து கே.கே.பட்டி வரை உள்ள சுத்தமான குடிநீர் திட்டத்தை அணைப்பட்டி வரை நீட்டிக்கப்பட்டு சுகாதாரமான, நிறைவான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்யப்படும். ஆதிதிராவிடர்களின் இரண்டு காலனிக்கும் தனித்தனியாக இரண்டு சமுதாய கூடங்கள் கட்டப்படும்.



சுகாதாரம் காக்க புதிய குப்பை கிடங்கு ஏற்படுத்தப்பட்டு ஊரின் குப்பைகள் அனைத்தும் அங்கு மக்கும், மக்கா குப்பைகளாக சேகரிக்கப்படும். இதன் மூலம் ஊரில் தினமும் இருமுறை குப்பைகளும், சாக்கடைகளும் அள்ளப்பட்டு பசுமை கிராமமாக்கப்படும். தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள சாக்கடைகள் பராமரிப்பு செய்யப்படும். வடக்கு ஆதிதிராவிடர் காலனியில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ள பிரச்னைக்கு தீர்வாக அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் பாதை நீட்டிக்கப்படும். தற்போதுள்ள தெருவிளக்குகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு ஊர் முழுவதும் சோலார் விளக்குகள் மாட்டப்படும். சமத்துவ மயான சாலை பராமரிப்பு செய்யப்பட்டும். ஊர் முழுவதும் சி.சி.ரோடுகள் பராமரிக்கப்பட்டு புதிய இடங்களில் அமைக்கப்படும். சண்முகாநதி பகுதியில் பன்றிகளின் தொல்லையை ஒழிக்க நிரந்தர தீர்வு காணப்படும். என்றார்(93450-90094)









      Our Apps Available On




      Dinamalar

      Follow us