/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/புதுடில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு எதிரொலி : மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்புதுடில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு எதிரொலி : மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்
புதுடில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு எதிரொலி : மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்
புதுடில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு எதிரொலி : மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்
புதுடில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு எதிரொலி : மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்
ADDED : செப் 11, 2011 01:01 AM
தூத்துக்குடி : புதுடில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்தும், வரும் செவ்வாய்கிழமை மீண்டும் குண்டுகள் வெடிக்கும் என்று வந்த இமெயில் மிரட்டலை “அடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
புதுடில்லி ஐகோர்ட் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், விமானநிலையங்கள், பஸ்ஸ்டாண்டுகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் வரும் செவ்வாய்கிழமை மீண்டும் முக்கிய இடங்களில் குண் டுகள் வெடிக்கும் என்று இö மயிலில் மிரட்டல் வந் ததையடுத்து தூத்துக்குடி மா வட்டத்தில் எஸ்பி.நரேந்திரன்நாயர் உத்திரவின் பேரில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 24 மணிநேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் மற்றும் தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட், புதிய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டுகள் ஏதும் இருக்கிறதா என்று சோதனையிட்டனர். ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பிறகே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைப்போல் திருச்செந்தூர், கோவில்பட்டி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.