ADDED : செப் 06, 2011 12:05 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருந்து இன்று முதல் மின்பாதையில், வைகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது.
திருச்சி- திண்டுக்கல் இடையே மின்மயாமாக்கும் பணி முடிவடைந்ததையடுத்து, தற்போது திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன. மதுரை வரை மின்பாதை முழுமை அடைந்தால் தான், அனைத்து ரயில்களையும் இயக்க முடியும். இந்நிலையில், வைகை எக்ஸ்பிரஸ், இன்று முதல், மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை டீசல் இன்ஜின் மூலம் சென்று, பிறகு மின்சார இன்ஜினில் இயக்கப்பட உள்ளது. பாண்டியன், நெல்லை, பொதிகை, அனந்தபுரி உள்ளிட்ட ரயில்கள், திருச்சி வரை டீசல் இன்ஜின் மூலமே இயக்கப்படும்.