/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சரக்கு ஆட்டோவுக்கு குவியும் ஆர்டர்கள்லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சரக்கு ஆட்டோவுக்கு குவியும் ஆர்டர்கள்
லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சரக்கு ஆட்டோவுக்கு குவியும் ஆர்டர்கள்
லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சரக்கு ஆட்டோவுக்கு குவியும் ஆர்டர்கள்
லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சரக்கு ஆட்டோவுக்கு குவியும் ஆர்டர்கள்
நாமக்கல்: லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால், சரக்குகளை கொண்டு செல்ல வியாபாரிகள், மினிடோர் ஆட்டோவை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளை, லாரி மூலம் கொண்டு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமரபாளையம் ஆகிய இடங்களில் ஜவுளிப் பொருள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களையும், லாரி மூலம் கொண்டு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்துவரும் லாரிகளும், லாரி உரிமையாளர் சங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனிடையே, லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால், மினிடோர் ஆட்டோ உரிமையாளர்களுக்கு மவுசு கூடியுள்ளது. அந்த ஆட்டோக்கள் மூலம், நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட வியாபாரிகள், தங்களது சரக்குளை கொண்டு செல்கின்றனர். உள்ளூர் மற்றும் அருகே உள்ள மாவட்டங்களுக்கும் மினிடோர் ஆட்டோ மூலம் சரக்கு கொண்டு செல்லப்படுகிறது.


