Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்க கோரிக்கை

மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்க கோரிக்கை

மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்க கோரிக்கை

மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்க கோரிக்கை

ADDED : ஜூலை 26, 2011 09:25 PM


Google News

மேட்டுப்பாளையம் : ''கோவை-மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கவும், பிளாட்பாரத்தை விரிவுபடுத்தி சேரன் எக்ஸ்பிரஸ் மற்றும் பாலக்காடு பாசஞ்சர் ரயிலை, மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று,'' மேட்டுப்பாளையம் மக்கள் நல பேரவை அமைப்பாளர் அரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் 1880 முதல் செயல் பட்டாலும், அடிப்படையான பல வசதிகள் இங்கே இல்லை. 10 பெட்டிகளில் 850 பேர் பயணம் செய்யும் கோவை பாசஞ்சர் ரயிலில், 2600 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்கின்றனர். ரயில்வே நிர்வாகம் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்.ஞாயிற்றுக்கிழமையில் இந்த ரயில் இயங்காததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேட்டுப்பாளையம் ஸ்டேஷனில் போதிய யார்டுகள் இல்லாததால் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் பாதி, கோவையில் நிறுத்தப்படுகின்றன. குறுகிய தூரமுள்ள பிளாட்பாரத்தை விரிவுபடுத்தவும், புதிய பிளாட்பாரம் அமைக்கவும் 1.99 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது; ஆனால் பணிகள் துவங்கவில்லை. கோவை-மேட்டுப்பாளையம் இடையே 14 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வே செய்த மின்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வீரபாண்டி, புதுப்பாளையம், துடியலூர், உருமாண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் பாசஞ்சர் ரயில் நின்று சென்றது. காலப்போக்கில் இந்த ஸ்டேஷன் கள் மூடப்பட்டன. இந்த ரயில் நிரந்தரம் செய்த பின்பு ஸ்டேஷன்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சேலம் கோட்ட மேலாளர் உறுதி அளித்தார். இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.காரமடையில் இருந்து தினமும் 2000க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்; அங்கே புக்கிங் அலுவலகம் இல்லை. ஸ்டேசன் மாஸ்டர் தான் டிக்கெட் கொடுக்கிறார். இங்கு தனியாக புக்கிங் அலுவலகம் அமைத்து, அதற்கு தேவையான அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், ரயில்வேக்கு சொந்தமாக 42 ஏக்கர் நிலமும், போதிய தண்ணீர் வசதியும் உள்ளது. அதனால், மிக நீளமான யார்டுகள் அமைத்து சேரன் எக்ஸ்பிரஸ், பாலக்காடு பாசஞ்சர் ஆகிய ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க, தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அரங்கசாமி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us