/உள்ளூர் செய்திகள்/தேனி/வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஊராட்சி உதவியாளர்கள் : பிற பணிகள் பாதிப்புவாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஊராட்சி உதவியாளர்கள் : பிற பணிகள் பாதிப்பு
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஊராட்சி உதவியாளர்கள் : பிற பணிகள் பாதிப்பு
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஊராட்சி உதவியாளர்கள் : பிற பணிகள் பாதிப்பு
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஊராட்சி உதவியாளர்கள் : பிற பணிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 29, 2011 11:16 PM
தேவதானப்பட்டி : உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதால், வழக்கமான பணியில் தொய்வு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. பணியில் உள்ள ஊராட்சி உதவியாளர்கள் வீட்டுவரி, குழாய்வரி, கடை லைசென்ஸ் மற்றும் தெருவிளக்கு, பைப்லைன் பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கான தயாரிப்பு பணிகள் நடக்கிறது. பல உறுப்பினர் வார்டு ஒன்றை உறுப்பினராக பிரித்தல், சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர்களை தற்போதைய நிலைக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரித்தல், வாக்காளர்களை பிரித்து எழுதும்பணி, உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணியில் ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராம ஊராட்சிகள் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இப்பணியில் மாற்றுதுறை ஊழியர்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.