/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஈசா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்ஈசா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ஈசா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ஈசா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ஈசா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 25, 2011 11:28 PM
கோவை :ஈசா இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லூரி யில் முதலாமாண்டு
பாடப்பிரிவுகள் துவக்க விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் விஷ்ணுராம் தலைமை
வகித்தார். சென்னை, ஐ.சி.டி., அகாடமி துணை முதன்மை மேலாளர் சுப்ரமணியம்
பேசுகையில்,''முதலாமாண்டு மாணவர்கள் கல்வியை அறிவுசார்ந்த ஆற்றலாக
பயன்படுத்த வேண்டும். தங்கள் பேச்சாற்றலையும், ஆங்கிலத்தில் உரையாடும்
திறமையையும் அடிப்படையாக கற்க வேண்டும். பாடங்களில் உள்ள அனைத்து அடிப்படை
கருத்துகளையும் இதர தனித் திறமைகளும், அடிப்படை இயக்கத் திட்ட
செயலாக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் தாங்கள்
தேர்ந்தெடுத்த துறை சார்ந்த அரிய தகவல்களை கல்வியில் பெருக்கி தங்களின்
வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கருவியாக கல்வியை அமைத்துக் கொள்ள வேண்டும்,''
என்றார். கல்லூரி ஆலோசகர் சினானந்தம், 'டீன்' சங்கரநாராயணன், பேராசிரியர்
ராஜேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.