ADDED : செப் 16, 2011 12:52 AM
விழுப்புரம்:தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் வழங்கும் விழாவில் அமைச்சர்
சண்முகம் பங்கேற்கிறார்.விழுப்புரம் அடுத்த பெத்தரெட்டிக்குப்பம்,
கொங்கரகொண்டான் கிராமத்தில் இன்று பகல் 12.30 மணி அளவில் மின்விசிறி,
மிக்சி மற்றும் கிரைண்டர் ஆகிய பொருட்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர்
சண்முகம் வழங்குகின்றார். மதியம் 1.30 மணிக்கு சிறுவந்தாடு அரசு மேல்நிலைப்
பள்ளியிலும், பிற்பகல் 2.30 மணிக்கு பில்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்
மாணவ, மாணவியருக்கு மடிக் கணினி வழங்குகிறார்.விக்கிரவாண்டி ஒன்றியம்
பிரம்மதேசத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் விழா வில் ஏழை குடும்
பத்திற்கு ஆடுகள் வழங்குகிறார்.
மாலை 4.30 மணிக்கு முகையூர் ஒன்றியம்
அருமலை கிராமத்தில் கறவை மாடுகள் வழங்க உள்ளார்.ஒலக்கூர் ஒன்றியம்
கருவம்பாக்கத்தில் நாளை காலை 10 மணிக்கு ஏழை எளியவர்களுக்கு கறவை மாடுகளை
அமைச்சர் வழங்கவுள்ளார். முற்பகல் 11.30 மணிக்கு விழுப்புரம் பெண்கள்
பள்ளியிலும், 12.30 மணிக்கு வளவனூர் அரசு ஆண்கள் பள்ளியிலும் மாணவ,
மாணவியருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவுள்ளார்.மதியம் 1.30 மணிக்கு
கண்டமானடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குகிறார். மாலை 4
மணிக்கு சின்னசேலம் ஒன்றியம் அம்மையகரத்தில் ஆடுகள் வழங்க உள்ளார்.


